Thursday, October 29, 2009

சாகித்ய அகாதெமி துணைத்தலைவர் புதுச்சேரி வருகை


சாகித்ய அகாதெமியின் துணைத்தலைவர் திரு.எஸ்.எஸ்.நூர் நேற்று புதுச்சேரிக்கு வருகை தந்தார். புதுவை ஆனந்தா இன் ஓட்டலில் நடைபெற்ற பஞ்சாபி மொழி ஆலோசனைக்குழுக் கூட்டத்தில் பங்கேற்றார். பின்னர் அன்று மாலை அண்ணாமலை ஓட்டலில் நடைபெற்ற தமிழ்‍‍, பஞ்சாபி கவிஞர்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கி சிறப்புரை ஆற்றினார். பின்னர்,சாகித்ய அகாதெமியின் புதுச்சேரி விற்பனை மையத்தினைப் பார்வையிட்டு அதை விரிவுபடுத்துவது தொடர்பாக சாகித்ய அகாதெமி பொதுக்குழு உறுப்பினர் மகரந்தனுடன் ஆலோசனை நடத்தினார். முன்னதாக, விற்பனை மையத்தினைப் பார்வையிட வந்த எஸ்.எஸ்.நூர் அவர்களை மகரந்தன் சால்வை அணிவித்து வரவேற்றார்.

உலக சிக்கன நாள் விழா

புதுச்சேரி அரசு, திட்டம் மற்றும் ஆராச்சித் துறை சார்பாக உலக சிக்கன நாள் விழா நாளை (அக்டோபர் 30) காலை 9.00 மணியளவில் புதுச்சேரி கூட்டுறவு ஒன்றிய வளாகத்தில் கொண்டாடப்படவுள்ளது.
இவ்விழாவில், முதலமைச்சர் திரு வெ.வைத்திலிங்கம் கலந்துகொண்டு சேமிப்பின் இன்றியமையாமை குறித்தும் சேமிப்பினால் நாட்டிற்கு ஏற்படும் நன்மைகள் குறித்தும் சிறப்புரையாற்றி, சிறுசேமிப்புத் திட்டத்தில் அதிக நிதி திரட்டிய வணிகவரித் துறைக்கு முதல் பரிசுக்கான சுழற்கேடயத்தையும், இரண்டவது பரிசு சுகாதாரத் துறைக்கும், மூன்றாவது பரிசு கூட்டுறவுத் துறைக்கும் மற்றும் நான்காவது பரிசு பொதுப்பணித்துறைக்கும் வழங்கவுள்ளார். மேலும், சஞ்சய்கா திட்டத்தின்கீழ் அதிக நிதி திரட்டிய வ.உ.சி.அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் நாவலர் நெடுஞ்செழியன் அரசு மேல்நிலைப்பள்ளி ஆகிய கல்வி நிறுவனங்களுக்கும் முதல் மற்றும் இரண்டாம் பரிசுக்கான சுழற்கேடயங்கள் வழங்கப்படவுள்ளன. இதுதவிர, நான்கு துறைகளுக்கும், அரசு தொழிற்நுட்ப மேனிலைப் பள்ளிக்கும் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்படவுள்ளன.

மத்திய கலாச்சாரத்துறை இணையமைச்சர் திரு வி. நாராயணசாமி சாகித்யஅகாதெமியின் விற்பனை மையத்திற்கு வருகை.



அண்மையில் புதுச்சேரிக்கு வருகை தந்த மாண்புமிகு மத்திய திட்டம், பாராளுமன்ற விவகாரங்கள் மற்றும் கலாச்சாரத்துறை இணையமைச்சர் திரு வி. நாராயணசாமி அவர்கள் புதுச்சேரியில் அமைந்துள்ள சாகித்யஅகாதெமியின் விற்பனை மையத்தினைப் பார்வையிட்டார். சாகித்ய அகாதெமியின் புதுச்சேரி விற்பனை மையத்திற்கு வருகைதந்த இணையமைச்சரை, சாகித்ய அகாதெமி பொதுக்குழு உறுப்பினரும் தமிழ் ஆலோசனைக்குழு உறுப்பினருமான மகரந்தன் வரவேற்றார். பின்னர், இந்த விற்பனை மையத்தினை வாசகர்கள் அமர்ந்து படிப்பதற்கு உண்டான வசதியுடன் விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அமைச்சரிடம் மகரந்தன் கோரிக்கை வைத்தார். அமைச்சர் அவர்கள் அதற்கு உண்டான நடவடிக்கைகளை எடுப்பதாக உறுதியளித்தார். புதுச்சேரி அரசின் கலை, பண்பாட்டுத்துறை இயக்குநர் திருமதி பானுமதி அவர்களும் உடனிருந்தார்.

Sunday, October 11, 2009

உரிமம் இல்லாமல் பட்டாசு விற்பனை-மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை


உரிமம் இல்லாமல் பட்டாசுத் தயாரிப்பவர்கள் மற்றும் பட்டாசு விற்பனை செய்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.  


இது தொடர்பாக புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் திரு கோ. ராகேஷ் சந்திரா விடுத்துள்ள அறிக்கையில் கூரியிருப்பதாவது :- 1884 ஆம் ஆண்டு இந்திய வெடிபொருட்கள் சட்டம் மற்றும் விதிமுறைகளுக்கு உட்பட்டு புதுச்சேரி மாவட்டத்தில் பட்டாசு தயாரித்தல் மற்றும் விற்பனை செய்வதற்கு புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட நீதிபதி அலுவலகம் உரிமம் வழங்கி வருகிறது. மேலும், அரசு ஒப்புதலுடன் புதுச்சேரி பகுதியிலுள்ள பட்டாசுத் தயாரிக்கும் தொழிலில் ஈடுபட்டு இருக்கும் குடும்பங்களின் நலனைக் கருத்தில் கொண்டும், அனைத்துப் பாதுகாப்பு நடவடிக்கைகளையும் மேற்கொண்டு பட்டாசுகள் தயாரிக்க வேண்டும் என்ற நிபந்தனையின் பேரில், அவர்களுக்கு தற்காலிக உரிமம் வழங்கப்பட்டுள்ளது. வருவாய், தீயணைப்புத்துறை மற்றும் காவல் துறையினருக்கு தற்காலிக உரிமம் வழங்கப்பட்ட நிறுவனங்களின் விபரம் அளிக்கப்பட்டு அந்நிறுவனங்களின் செயல்பாடுகளைத் தீவிரமாகக் கண்காணிக்கும்படி உத்தரவிடப்பட்டுள்ளது. எனவே, வருகின்ற தீபாவளி பண்டிகையை முன்னிட்டு உரிமம் இல்லாமல் பட்டாசுத் தயாரிப்பவர்கள் மற்றும் உரிமம் பெறாமல் பட்டாசுகளை விற்பனை செய்பவர்கள்மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஒரு சிலர் குழுவாக சேர்ந்து உரிமம் பெறாமல் மொத்தமாக பட்டாசுகளை வாங்கி தங்களுக்குள் பிரித்துக்கொள்வது, அவற்றிற்காக வெடிபொருட்களை ஒரு இடத்தில் இருப்பு வைப்பது போன்றவையும்கூட சட்டத்திற்கு புறம்பானதாகும். சிசெயலால் விபத்து ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. எனவே சட்டத்திற்கு புறம்பான இந்தகைய செயல்களில் ஈடுபட வேண்டாம் என்று அந்த அற்க்கையில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. 


மேலும் பொதுமக்கள் கவனத்திற்காக கீழ்கண்ட நெறிமுறைகளையும் அவர் கூறியுள்ளார் 
1. உரிமம் இல்லாமல் பட்டாசுகளைத் தயரிக்கக்கூடாது. 
2. உரிமம் பெறாமல் பட்டாசுகளை விற்கக்கூடாது 
3. அரசு அளித்துள்ள பட்டாசுத் தயாரிப்பு மற்றும் விற்பனை விதிமுறைகளை முறையாகப் பின்பற்ற வேண்டும் 
4. பட்டாசு விற்பனை உரிமம் பெற்றவர்கள், உரிமம் பெறப்பட்ட குறிப்பிட்ட இடத்தில் மட்டுமே விற்பனை செய்ய வேண்டும். வேறு இடங்களில் விற்பனை செய்வது சட்டப்படி தண்டணைக்குரிய குற்றமாகும். 
5. அரசின் உரிமம் பெறாமல் பட்டாசுகளை விற்பனைக்காக வைத்திருப்பதும், விற்பனை செய்வதும் வெடிமருந்துச் சட்டம் 1884-ன் கீழ் தண்டனைக்குரிய குற்றமாகும். 
6. பட்டாசுக் கடைகள் முன்பு மணல் மூட்டைகள், தண்ணீர் தொட்டிகள் மற்றும் தீயணைப்புச் சாதனங்கள் வைத்திருக்க வேண்டும். 
7. அரசின் விதிமுறைகள் முழுமையாகவும் கட்டாயமாகவும் பின்பற்றப்பட வேண்டும்.


இத்தகைய செயல்பாடுகளைக் கண்காணிக்க பறக்கும் படை அமைக்க துணை மாவட்ட ஆட்சியர்களுக்கும் காவல்துறைக்கும் உத்திரவிடப்பட்டுள்ளது. வெடிபொருட்களை பயன்படுத்தும் அனைத்துத் தொழிற்சாலைகள், பட்டாசுத் தயாரிக்கும் இடங்கள், சில்லறை விற்பனை செய்யப்படும் இடங்கள் அனைத்தும் இந்த பறக்கும் படை கண்காணிக்கும். உரிமம் இல்லாமல் எந்த ஒரு இடத்திலும் பட்டாசு இருப்பு வைத்திருந்தாலும் அவை பறிமுதல் செய்யப்பட்டு தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.  


-மகரந்தன்

Friday, October 2, 2009

காந்தி வழியில் அமெரிக்கா


காந்தி பிறந்தநாளையட்டி அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். 


அதில் அவர், " மகாத்மா காந்தி அறிமுக செய்த வன்முறை இல்லாத போராட்டம் இன்று உலகுக்கே வழிகாட்டியாக அமைந்துள்ளது. மார்ட்டின் லூதர் கிங் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்த போது மகாத்மா கந்தியின் கொள்கைகளையும், வழிகாட்டுதல்களையும் தெரிந்து கொண்டு அதே முறையை அமெரிக்காவில்பின்பற்றினார். இந்த வழிய்ல் உரிமைப் போராட்டங்கள் நடந்தன. இன்று அமெரிக்கா மகாத்மா காந்தியின் வழியில் செல்கிறது. அவருடைய போராட்டங்கள், கொள்கைகள், அறிவுரைகள் அனைத்தும் உலகம் முழுவதும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. அவருடைய கொள்கைகளை அனைவரும் பின்பற்ற வேண்டும்" என்று கூறியுள்ளார்.  


எனது "ஹீரோ" மகாத்மா காந்தி என்று ஒபாமா ஏற்கனவே கூறியுள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது. 

புதுவையில் பன்றிக் காய்ச்சலுக்கு மேலும் ஒருவர் பலி

புதுவையில் பன்றிக் காய்ச்சலுக்கு மேலும் ஒருவர் பலி


காஞ்சிபுரம் செய்யாறு பகுதியைச் சார்ந்தவர் லோகநாயகி (52). இவர் பன்றிக் காய்ச்சல் அறிகுறியுடன் கடந்த வாரம் ஜிப்மரில் சேர்க்கப்பட்டார். அவர் சேர்க்கப்பட்ட சிறிது நேரத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். பிரேத பரிசோதனைக்குப் பின்னர் அவரது உடல் அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

இதற்கிடையே, கடந்த 25ஆம் தேதி திண்டிவனம் கட்டளை மரியமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் ஜனார்த்தனன் (32) என்பவர் உடல்நில பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையிலிருந்து வெளியேறி ஜிப்மரில் சேர்ந்தார். மருத்துவர்கள் அவரது இரத்த மாதிரியை ஆய்வுக்காக சென்னைக்கு அனுப்பினர். இதில் அவருக்கு பன்றிக்காய்ச்சல் நோய்க்கான அறிகுறிகள் இருப்பது உறுதிபடுத்தப்பட்டது. எனவே மருத்துவர்கள் அவரை தனி அறையில் வைத்தி சிகிச்சை அளித்து வந்தனர். நேற்று அவருக்கு திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டதால் ஆக்ஸிசன் மூலக் சுவாசம் அளிக்கப்பட்டது. இருப்பினும் சிகிச்சி பலனின்றி அவர் நேற்றிரவு பரிதாமபமாக இறந்தார். இவரது இறப்பின் மூலம் புதுவையில் பன்றிக் காய்ச்சல் நோய்க்கு பலியானவர்கள் எண்ணிக்கை 2 ஆக உயர்ந்துள்ளது.